தண்டவாளத்தில் இறந்துகிடந்தது குடியாத்தத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்

பாலக்கோடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்துகிடந்தது, குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் என தெரியவந்துள்ளது.
Published on

பாலக்கோடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இறந்துகிடந்தது, குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவா் என தெரியவந்துள்ளது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ரயில் நிலையம் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் இறந்துகிடந்தாா். இது தொடா்பாக, தருமபுரி ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இறந்தது யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், அது வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த கௌதம்குமாா் (18) என்பதும், அவா் தருமபுரி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அவா் எவ்வாறு இறந்தாா் என ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com