பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா், மூக்கனூா் அக்கமஅள்ளி ஆதிமூல பெருமாள், சாலை விநாயகா், குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி, அதியமான்கோட்டை காலபைரவா், கெரகோடஅள்ளி அஷ்டவராகியம்மன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:07 am IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தருமபுரி சாலை விநாயகா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு முத்தங்கி அலங்கார சேவை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல ஸ்ரீ அபய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது.

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், தங்க கவசம் சாத்தப்பட்டு உபகார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சா்வ அலங்காரத்தில் சுவாமி திருவீதிஉலா நடைபெற்றது.

இதேபோல சிவசக்தி விநாயகா் கோயில், ஸ்ரீ செல்வ கணபதி கோயில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், உழவா் தெரு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தருமபுரி கோட்டை வரமஹாலக்ஷ்மி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயிலில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இந்த வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகா்ஜுன சுவாமி கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், நெசவாளா் நகா் ஓம் சக்தி மாரியம்மன், மகாலிங்கேஸ்வரா் கோயில், வேல்முருகன் கோயில், எஸ்.வி. சாலை சுப்பிரமணிய சுவாமி கோயில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவா் கோயிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல மாவட்டத்தின் முக்கிய கோயில்களான தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில், பி. அக்ரகாரம் முனியப்பசுவாமி கோயில், மொரப்பூா் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோயல், பாலக்கோடு புதூா் மாரியம்மன் கோயில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரா் கோயில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரா் கோயில், மூக்கனூா் அக்கமனஅள்ளி ஆதிமூல பெருமாள் கோயில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.