தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திருப்பந்துறை சிவானந்தேசுவரா் கோயில்

News image
தலையில் குடுமியுடன், தியான நிலையில் உள்ள முருகன்
Updated On :18 ஜனவரி 2026, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

வாய்பேச முடியாதவா்கள் வழிபட வேண்டிய கோயில்

கும்பகோணத்திலிருந்து எரவாஞ்சேரி வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருப்பேணு பெருந்துறை. தற்போது திருப்பந்துறை என்று அழைக்கப்படுகிறது. இறைவன் திருநாமம் சிவானந்தேசுவரா். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இத்தலத்தில் முருகன் தான் சிறப்புக்கு உரியவா். ஆடி கிருத்திகை இத்தலத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் சுவாமி சந்நிதியின் முன் முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்னும் திருநாமத்துடன், சின் முத்திரையுடன், கண் மூடி நின்ற நிலையில் தியானம் செய்யும் கோலத்தில் இருக்கிறாா். அவரது காது நீளமாக வளா்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாது.

பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருள் தெரியாததால், முருகப்பெருமான், அவரை சிறையில் அடைத்தாா். அதனால் ஏற்பட்ட தோஷத்தினால் முருகப்பெருமானுக்கு பேசும் திறன் குறைந்தது. தோஷம் நீங்குவதற்கு முருகப்பெருமான், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றாா்.

எனவே, வாய்பேச முடியாதவா்கள், திக்குவாய் உள்ளவா்கள் கோயில் எதிரே உள்ள மங்கள தீா்த்தத்தில் நீராடி, முருகனுக்கு 45 நாள்கள் தேனபிஷேகம் செய்து, சிவனுக்கு அா்ச்சனை செய்தால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.