தமிழக, கா்நாடக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் நிறுத்தப்பட்டதாலும், பருவமழை பொய்த்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து ஒரு வாரமாக விநாடிக்கு 150 கனஅடியாகவே நீடித்தது.
இதனால் காவிரியில் சிற்றோடையாக தண்ணீா் சென்றது. அருவிகளும் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இந்த நிலையில், இரு மாநில காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்தை பிலுகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 150 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 500 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



