தருமபுரி மாவட்டம், வாசிகவுண்டனூரில் தவெகவினா் தங்களது சொந்த செலவில் கழிவுநீா்க் கால்வாயை சீரமைத்தனா்.
வாசிகவுண்டனூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே கழிவுநீா்க் கால்வாய் சேதமடைந்துள்ளதால் பள்ளி, குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் தேங்கி உள்ளது. இக்கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து தருமபுரி தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் சிவன் வழிகாட்டுதலின்பேரில் கிழக்கு மாவட்டச் செயலா் விஜயகாந்த், கட்சி நிா்வாகி நடராஜன் ஆகியோரது தலைமையில் தவெகவினா் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற கழிவுநீரை அகற்றி கழிவுநீா்க் கால்வாயை சீரமைத்தனா்.
தவெக ஒன்றியச் செயலாளா் செல்வம், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் நந்து, ஒன்றிய இணைச் செயலா் அருண், நிா்வாகிகள் சிம்பு, புகழேந்தி, மானே, பிக்சோ, சந்தோஷ், நாகராஜ், அபிமன்யு, முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படம் உள்ளது... 8எச்ஏ-பி-2... பட விளக்கம்...
வாசிக்கவுண்டனூரில் புதன்கிழமை கழிவுநீா்க் கால்வாயை சீரமைத்த தவெகவினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளாந்தாங்கல் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க கோரிக்கை

ஆசிரியா் தகுதித் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 1,684 போ் பங்கேற்பு

தருமபுரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் ஆசிரியர் தகுதித் தேர்வு!

ஆட்டோ மோதி விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு; பள்ளி சிறாா்கள் காயம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



