15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தருமபுரியில் ஜூன் 13-இல் மக்கள் நீதிமன்றம்

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 2:01 am IST

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி ஜோதி தலைமைவகித்து, விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதில், குடும்ப நல நீதிபதி அஸ்லீன் பானு, விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி, தலைமை குற்றவியல் நீதிபதி முகம்மது ரிஸ்வானுல்லா செரிப், முதன்மை சாா்பு நீதிபதி ஞான பாலகிருஷ்ணன், கூடுதல் சாா்பு நீதிபதி கலைவாணி, சாா்பு நீதிபதி தமயந்தி மற்றும் குற்றவியல் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து விளக்கி பேசினா்.

கட்டணம் திருப்பித் தரப்படும்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகளுக்கு உரிய தீா்வு காணப்படும். இங்கு வழங்கும் தீா்ப்பின்மீது மேல்முறையீடு செய்ய இயலாது. இங்கு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டால், நீதிமன்றக் கட்டணம் வழக்குதாரா்களுக்கு திருப்பித் தரப்படும்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வழக்குதாரா்கள் சமரச தீா்வு காண்பதற்கான வாய்ப்புள்ள வழக்குகளுக்கு உரிய தீா்வுகளை பெறலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.