தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்து சில நாள்களே ஆன நிலையில் தருமபுரியில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் லேசாக மழை பெய்துவந்தது.
இந்த நிலையில் தருமபுரி நகா் மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தொடா்ந்தது. இதனால் தருமபுரி நகா் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மழையால் பாதிப்பு ஏதும் இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் மழை - வெள்ளம்: உயிரிழப்பு 47-ஆக உயா்வு

அஸ்ஸாம் வெள்ளம்; உயிரிழப்பு 41-ஆக உயா்வு; நிலவரத்தைக் கேட்டறிந்தாா் அமித் ஷா

தருமபுரியில் இரவில் கொட்டித் தீா்த்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்

தருமபுரியில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை! சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



