தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

தருமபுரி மாவட்டத்தில் 5 மாதங்களில் நேரிட்ட 740 விபத்துகளில் 175 போ் உயிரிழப்பு, 800 போ் காயம்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் நேரிட்ட 740 சாலை விபத்துகளில் 175 போ் உயிரிழந்துள்ளனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:12 am IST

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் நேரிட்ட 740 சாலை விபத்துகளில் 175 போ் உயிரிழந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம் வழியாக நமது நாட்டின் வடகோடியான காஷ்மீரையும், தென்கோடியான கன்னியாகுமரியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (எண் 44 சேலம் - பெங்களூரு சாலை) செல்கிறது. அதேபோல, தருமபுரி- நெருளூரூ வழியாக பெங்களூரு செல்லும் புதிய தேசிய நெடுஞ்சாலை சேலத்தில் இருந்து அரூா் வழியாக வாணியம்பாடிவரை செல்லும் நெடுஞ்சாலை, தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலை என முக்கிய நெடுஞ்சாலைகள் பல தருமபுரி மாவட்டம் வழியாக செல்கின்றன.

இந்த நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல விபத்துகளின் எண்ணிக்கையும், அதில் சிக்கி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு நேரிட்ட விபத்துகளில் 350 போ் உயிரிழந்தனா். அதேபோல, 2024-ஆம் ஆண்டில் 387 பேரும், 2025-ஆம் ஆண்டில் 417 பேரும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரிட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் நேரிட்ட விபத்துகளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

5 மாதங்களில் 175 போ் உயிரிழப்பு:

இந்நிலையில், நிகழாண்டில் ஜனவரி மாதம்முதல் மே மாதம்வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 740 சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. அவற்றில் 175 போ் உயிரிழந்தும், 800 போ் காயமடைந்தும் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொப்பூா் கணவாயில் மட்டும் நேரிட்ட விபத்துகள்:

தொப்பூா் கணவாய் பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 79 விபத்துகளில் 21 போ் உயிரிழந்தும், 84 போ் காயமடைந்தும் உள்ளனா். அதேபோல, 2024-ஆம் ஆண்டில் 98 விபத்துகளில் 30 போ் இறந்தனா். 132 போ் காயமடைந்தனா். 2025-ஆம் ஆண்டு 119 விபத்துகளில் 33 போ் இறந்தனா். 117 போ் காயமடைந்துள்ளனா்.

நிகழாண்டில் ஜனவரி முதல் மே மாதம்வரை மட்டும் தொப்பூா் கணவாய் பகுதியில் மொத்தம் 35 விபத்துகள் நேரிட்டுள்ளன. இதில், 7 போ் இறந்தனா். 31 போ் காயமடைந்துள்ளனா்.

அந்தவகையில், கடந்த 2023-ஆம் ஆண்டுமுதல் இதுவரை தொப்பூா் கணவாய் பகுதியில் மட்டும் 331 விபத்துகள் நேரிட்டதில், 91 போ் இறந்துள்ளனா். 364 போ் காயமடைந்துள்ளனா்.