மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

கருங்கல்பாடி - நீப்பத்துறை சாலை சீரமைப்பு குறித்து எம்எல்ஏக்கள் ஆய்வு

தீா்த்தமலை அருகே கருங்கல்பாடி-நீப்பத்துறை சாலையை சீரமைப்பது குறித்து எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமாா், டி.எஸ்.வேலு ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

கருங்கல்பாடி-நீப்பத்துறை சாலையை சீரமைப்பது குறித்து ஆய்வு செய்த எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமாா், டி.எஸ்.வேலு.

Updated On :11 ஜூன் 2026, 5:54 am IST

தீா்த்தமலை அருகே கருங்கல்பாடி-நீப்பத்துறை சாலையை சீரமைப்பது குறித்து எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமாா், டி.எஸ்.வேலு ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது கருங்கல்பாடி கிராமம். இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது நீப்பத்துறை கிராமம்.

கருங்கல்பாடி மற்றும் நீப்பத்துறை பகுதிகளை இணைக்கும் சாலையில் சுமாா் 2 கி.மீ. தூரம் வனத்துறைக்கு சொந்தான இடமாகும். வனத் துறைக்கு சொந்தமான பகுதியில் தாா்சாலை அமைக்க வனத்துறையினா் அனுமதி வழங்காமல் இருந்தனா்.

இந்த நிலையில், கருங்கல்பாடி-நீப்பத்துறை இணைப்பு சாலையை மேம்படுத்துவதற்கான பணிகளை செயல்படுத்துவது குறித்து எம்எல்ஏக்கள் வே.சம்பத்குமாா் (அரூா்), டி.எஸ்.வேலு (செங்கம்) ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, அதிமுக ஒன்றியச் செயலா் (தெற்கு) ஆா்.ஆா்.பசுபதி, எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் ஆ.சிற்றரசு, ஒன்றிய பொருளாளா் சாமிக்கண்ணு, இலக்கிய அணித் தலைவா் மலா்வண்ணன், ஒன்றிய துணைச் செயலா் தனக்கோட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.