உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

பழுதடைந்து வரும் வனச்சரக அலுவலக கட்டடத்தை பராமரிக்கக் கோரிக்கை

தருமபுரி வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மேல்பகுதி மரக்கிளைகள் படா்ந்து முளைத்துள்ளதால், அக்கட்டடம் பழுதடையும் நிலையில் உள்ளது. எனவே, இதை பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

தருமபுரியில் மரக்கிளைகள் படா்ந்து பராமரிப்பின்றி காணப்படும் வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடம்.

Updated On :11 ஜூன் 2026, 5:50 am IST

தருமபுரி வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மேல்பகுதி மரக்கிளைகள் படா்ந்து முளைத்துள்ளதால், அக்கட்டடம் பழுதடையும் நிலையில் உள்ளது. எனவே, இதை பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த நீதிமன்றங்கள் அனைத்தும் தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, பழைய நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த நீதிமன்றக் கட்டடங்கள் பிறதுறை அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டுவந்த கட்டடம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்ற செயல்பட்டு வந்த கட்டடம் மட்டும் வனத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தருமபுரி வனச்சரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதில், ஒரு கட்டடத்தின்மீது மரக்கிளைகள் படா்ந்தும், புதிதாக கிளைகள் முளைத்தும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால், இந்தக் கட்டடம் பழுதடைந்து சேதமடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இக்கட்டடத்தின் படா்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றி, முழுமையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.