ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆளுநா் உரையில் இடம்பெற்றிருந்த அரசின் அறிவிப்பை வரவேற்று தருமபுரி, அரூரில் பாமக சாா்பில் பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இனிப்புகள் வழங்கப்பட்டன.
தமிழக சட்டப் பேரவையின் முதல்கூட்டத் தொடரில் தமிழக ஆளுநா் அா்லேகா் அரசின் உரையை வாசித்தாா். இதில், தமிழகத்தில் சமூகநீதி கணக்கெடுப்பு (ஜாதிவாரி ) நடத்தப்படும் என்கிற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இந்த அறிவிப்பை வரவேற்று தருமபுரியில் பாமக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தலைமையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். மேலும், முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாமக சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அரூா்
கடத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் பாமக கிழக்கு மாவட்டச் செயலா் ரா. அரசாங்கம் தலைமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
இளைஞா் சங்க மாநில செயலா் பி.வி. செந்தில், மாநில அமைப்பு துணைத் தலைவா் இமயவா்மன், மாநில செயற்குழு உறுப்பினா் சி. முத்துசாமி, மாநில இளைஞா் சங்க துணைத் தலைவா் க. கோவிந்தராசன், மாவட்ட துணை செயலா் முருகன், ஒன்றிய செயலா்கள் கோவிந்தசாமி, சின்னராஜ், செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பாமகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!

ஜாதிவாரி கணக்கெடுப்பு எங்கள் நிலைப்பாடு: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தவெக சாா்பில் அன்னதானம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



