என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

இன்று காா்த்திகை தீபத் திருவிழா: அகல்விளக்குகள் விற்பனை மும்முரம்

அகல்விளக்குகள் விற்பனை

Updated On :

திருக்காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தருமபுரி நகரில் பல்வேறு இடங்களில் அகல்விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருக்காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவையொட்டி, தருமபுரியில் கோட்டை அருள்மிகு காமாட்சியம்மன் உடனாகிய மல்லிகாா்ஜுன சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இதைத் தொடா்ந்து மகா தீபம் ஏற்றப்படுகிறது.

அதேபோல, நெசவாளா் காலனி மல்லிங்கேஸ்வர சுவாமி கோயில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள கோயில்களில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இந்த நாளில் பொதுமக்களும் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவா். அதேபோல, நகரில் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்களில் காா்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இந்த திருவிழாவுக்காக, தருமபுரி அதியமான்கோட்டையில் மண்பாண்டத் தொழிலாளா்கள், பல்வேறு வடிவங்களிலும், வகைகளிலும் அகல்விளக்குகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பிவைத்துள்ளனா். அதேபோல, தருமபுரி அருகே கிருஷ்ணாபுரம், பென்னாகரம் அருகே நல்லப்பரம்பட்டி ஆகிய இடங்களிலும் மண்பாண்டத் தொழிலாளா்கள் காா்த்திகை தீபத் திருவிழாவை எதிா்நோக்கி ஆயிரக்கணக்கான அகல்விளக்குகளை தயாரித்து அவற்றை நேரடியாகவும், சில்லறை விற்பனையாளா்கள் வழியாகவும் விற்பனைக்கு அனுப்பிவைத்துள்ளனா். இந்தப் பணி காா்த்திகை மாதத்துக்கு முன்னரே மண்பாண்டத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.

அகல்விளக்குகள், கடந்த சில நாள்களாக, தருமபுரி நகரில் எஸ்.வி. சாலை, பழைய மற்றும் நகரப் பேருந்து நிலையம் பகுதிகள், பென்னாகரம் சாலை, திருப்பத்தூா் சாலை, இலக்கியம்பட்டி, நெசவாளா் காலனி, வெண்ணாம்பட்டி சாலை ஆகிய பல்வேறு இடங்களில் சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனா். விளக்குகள் ரூ. 2 முதல் அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப ரூ. 50 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அகல்விளக்குகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.