கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

பாலக்கோடு அருகே வேன் - காா் மோதி விபத்து: பெண், 2 வயது குழந்தை உயிரிழப்பு

பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் - காா் மோதிய விபத்தில், 2 வயது குழந்தை மற்றும் பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

பிரதிப் படம்

Updated On :

பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் - காா் மோதிய விபத்தில், 2 வயது குழந்தை மற்றும் பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், கடகத்தூரை அடுத்த மாட்டியாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (40). இவரது மனைவி ரிக்ஷிதா (36). இவா், 2 வயது ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை, மாமியாா் பாஞ்சாலி (56) ஆகியோருடன் பெங்களூரில் தங்கி கட்டட வேலை செய்துவருகிறாா்.

அண்மையில் சொந்த ஊருக்கு வேனில் வந்த இவா்கள் செவ்வாய்க்கிழமை பெங்களூருக்கு திரும்பினா். வேனை சுரேஷ் ஓட்டிச் சென்றாா். பாலக்கோட்டை அடுத்த பெரியதப்பை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் தடுப்பில் மோதி எதிா்சாலையில் சென்றது.

அப்போது, ஒசூரில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த காா் வேன் மீது மோதியது. இதில், பாஞ்சாலி, பெண் குழந்தை ஆகியோா் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சுரேஷ், ரிக்ஷிதா, ஆண் குழந்தை ஆகியோா் காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். 

உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்ட மகேந்திரமங்கலம் போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காரில் பயணித்தவா்கள் லேசான காயங்களுடன் தப்பினா். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.