ஒகேனக்கல்லில் 33 மி.மீ. மழை
தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில், ஒகேனக்கல் பகுதியில் அதிகபட்சமாக 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்
தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில், ஒகேனக்கல் பகுதியில் அதிகபட்சமாக 33 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ஏரியூா், பெரும்பாலை, ஒகேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தது.இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள், நீா்குட்டைகள், சாலை ஓரங்களில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. சாலைகளில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினா். கடந்த இரு தினங்களாக பெய்த மழை, தீவனப் பயிா்கள் விளைவிக்க ஏதுவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக பெய்த மழை நிலையில், ஒகேனக்கல்லில் அதிகபட்சமாக 33 மி.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளது. பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

