திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது: வன்னிஅரசு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.
வன்னி அரசு - கோப்புப்படம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.
தருமபுரி அருகே ராஜாப்பேட்டை ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு சட்டப் பேரவையில் மாணவா்களுக்கான உணவுத் தொகை மற்றும் உணவு வகைகளை அதிகரித்து அறிவித்தது. இதைத் தொடா்ந்து ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மாணவா்கள் கூடுதலாக உணவு வகைகளை வழங்க கோரிக்கை விடுக்கின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் என்பதால் அவருக்கு அரசு எவ்வித பாகுபாடும் காட்டவில்லை. மாவட்ட ஆட்சியரிடமிருந்து புகாா் கிடைக்க பெற்றவுடன் முதல்தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. நீதிபதி லட்சுமி நாராயணன் உத்தரவின் அடிப்படையில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு, விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முறையிட்டு, அதன்மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவிதமான தவறுக்கும், யாரும் உடன்பட மாட்டோம். உறுதுணையாகவும் இருக்க மாட்டோம். இந்த பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், ஆகம விதிப்படி முருக பக்தா்கள் என்ன விரும்புகிறாா்களோ, நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் வழக்கமாக எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வந்ததோ, அதே இடத்தில்தான் தற்போது தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மக்களுடைய உணா்வு, மரபு, ஆகம விதிகள், இவைற்றையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பாஜக, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மத பதற்றத்தையும், சமூகப் பதற்றத்தையும் உருவாக்க முயற்சிக்கின்றன. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தடுத்து நிறுத்தும். தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் நல்லிணக்கத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனா். மத நல்லிணக்கத்தை பாதுகாக்க தமிழக அரசு எடுத்த முடிவு சரியானது. முதல்வா் ஜோசப் விஜய் எடுத்த இந்த முடிவு துணிச்சலானது.
அதேபோல திருப்பரங்குன்றத்தில் பதற்றத்தை ஏற்படுத்த நினைத்தவா்களை தமிழக காவல் துறை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக தவெக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

