ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது.

கோப்புப் படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக இருந்தது.
கா்நாடக மாநில காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதாலும் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை 4,000 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 3,000 கனஅடியாக குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

