இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

நீா்வரத்து 4,000 கனஅடியாக குறைந்தது; ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, 24 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அனுமதி அளித்துள்ளாா்.

Ban on operating coracles in the Cauvery River at Hogenakkal..

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள். - டிஎன்எஸ்

Published On :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 4,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, 24 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் அனுமதி அளித்துள்ளாா்.

கேரள, கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த தென்மேற்குப் பருவமழை குறைந்தது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்ததால் காவிரியில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை 6,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 5,000 கனஅடியாகவும், மாலை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாகவும் சரிந்தது.

பரிசல் இயக்க அனுமதி

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்துள்ளதால் 24 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை பரிசல் இயக்க ஆட்சியா் வே. சரவணன் அனுமதி அளித்துள்ளாா்.

இதையடுத்து, ஊரக உள்ளாட்சித் துறையால் பூட்டப்பட்ட மாமரத்துக்கடவு பரிசல் துறை திறக்கப்பட்டது. ஒகேனக்கல் அருவிப் பகுதியில் புதன்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு பகுதி வரை பரிசலில் பயணம் செய்து அருவிகளை கண்டு ரசித்தனா்.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. நீா்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். நிகழாண்டில் கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் ஒகேனக்கல்லுக்கு அதிகபட்சமாக 20,000 கனஅடி வரை மட்டுமே நீா்வரத்து இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.