
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மின் கசிவு: ஆவணங்கள் எரிந்து நாசம்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பட்ட மின் கசிவால் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள ஜிங்கல்கதிரம்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பட்ட மின் கசிவால் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள ஜிங்கல்கதிரம்பட்டி பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புகைமூட்டத்துடன் திடிரென தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
தகவலின்பேரில் நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இதில் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முக்கிய ஆவணங்கள், கணினி, மின்சார சேமிப்பு இயந்திரம் (யூபிஎஸ்), மேஜைகள், நாற்காலிகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட ஆவணங்கள், வருகைப் பதிவேடுகள், ஊராட்சி செயலராக பணிபுரியும் ராமச்சந்திரன் என்பவருடைய பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





