பர்கூரில் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி, புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி, பர்கூர் அரிமா சங்கம் ஆகியன இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு பேரணி, பள்ளி வளாகத்தில் தொடங்கியது. பள்ளியின் தாளாளர் சிவராஜ், தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர்கள் வெங்கடேசன், இளங்கோ, முன்னாள் தலைவர் திம்மிசெட்டி, பள்ளியின் மேலாளர் கூத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணியை கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியர் அருண், கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி சாலை, காவல் நிலையம், பர்கூர் டெக்ஸ்டைல் மார்க்கெட், சின்ன பர்கூர் சாலை, காரகுப்பம் சாலை வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளி, வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி என மூன்று பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
டெங்கு கொசுவை ஒழிப்போம், தண்ணீர் தொட்டிகளை மூடி வைப்போம், சுகாதாரத்தை பேணிக்காப்போம் என்பது போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு இசைக் கருவிகள் இசைத்தபடி சென்றனர். இறுதியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர்.
இந்தப் பேரணியில் பள்ளியின் முதல்வர் மெரினா பலராமன், துணை முதல்வர் ஜெலஜாக்சா, தலைமையாசிரியர் குலசேகரபாண்டியன், வட்டாட்சியர் தணிகாசலம், வட்டார மருத்துவ அலுவலர் உதயசூரியன், சுகாதார ஆய்வாளர்கள் பாபு, சரவணன், மேற்பார்வையாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.