தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

சூளகிரி அருகே 33 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய திருவிழா

சூளகிரி அருகே 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நடத்திய ஸ்ரீதேவி உத்தம கரகம் சாக்கியம்மன் பல்லக்கு உற்சவம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 மே 2018, 2:44 am IST

சூளகிரி அருகே 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நடத்திய ஸ்ரீதேவி உத்தம கரகம் சாக்கியம்மன் பல்லக்கு உற்சவம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் செம்பரசனப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீதேவி உத்தம கரகம் சாக்கியம்மன் கோயில் திருவிழா கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை பச்சை கரகம், பல்லக்கு உற்சவ விழா தொடங்கியது.
இதில் செம்பரசனப்பள்ளி, மயிலேப்பள்ளி, பெத்தசிகரப்பள்ளி, எர்ணப்பள்ளி, கங்கசந்திரம் உள்ளிட்ட 33 கிராமங்களை சேர்ந்த மக்கள் பச்சை கரகம் எடுத்து வந்தனர்.
இவ்விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஆதிதிராவிடர் மக்களின் பலகை கரகம், குரும்பர் இன மக்களின் பாரம்பரிய நிகழ்ச்சியான தலையில் தேங்காய் உடைத்தல் நடைபெற்றது. மேலும், 7 சுவாமிகளின் கலச ஆட்டம், பூக்கள் அலங்காரத்துடன் ஆராதனை செய்யப்பட்டது. 33 கிராமங்களில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். இரவில் வாண வேடிக்கையும், தேரோட்டமும் நடைபெற்றது.
முன்னதாக காலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிமுக மேற்கு ஒன்றிய செயலர் மது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இவ்விழாவில், 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 33 கிராம மக்களும், சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனால் சூளகிரி-பேரிகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.