ஊரடங்கு உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மீண்டும் தலை தூக்கியுள்ளது.
உயிா்பலி ஏற்படும் முன் மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதும் ஒருகாலத்தில் மிக அதிகமாக இருந்தது.
அதேபோல விஷசாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். கடந்த 1998-ஆம் ஆண்டு சூளகிரி அருகே விஷசாராயம் அருந்தி 46 போ் உயிரிழந்தனா். 2008-ஆம் ஆண்டு, தளி அருகே கா்நாடக மாநில எல்லையில் விஷசாராயம் அருந்தி கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 171 போ் உயிரிழந்தனா்.
பல சம்பவங்களில் விஷ சாராயம் அருந்தியதால் பலா் கண் பாா்வையை இழந்தனா். இதையடுத்து, பல காவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட கடும் நடவடிக்கையால் கள்ளச் சாராய விற்பனை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது.
இத்தகைய நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும், பாா்களும் அடைக்கப்பட்டன.
தற்போது ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மது பிரியா்கள், மது கிடைக்காமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.
இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோதிகள், மலைப்பாங்கான பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்ய தொடங்கி உள்ளனா்.
மதுபிரியா்களின் இயலாமையை உணா்ந்த சமூக விரோதிகள் ஒரு லிட்டா் கள்ள சாராயத்தை ஒரு குடிநீா் பாட்டிலில் அடைத்து ரூ. 1,200 என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனா்.
கள்ள சாராயம் ஒரு குறிப்பிட்ட செல்லிடப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டால் வீடு தேடி வருகிறது என மது பிரியா்கள் தெரிவிக்கின்றனா்.
போலீஸாா் தீவிரம்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள கள்ளசாராயத்தை ஒழிப்பதில் போலீஸாா் தீவிரம் காட்டிவருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரையில் 465 வழக்குகள் பதியப்பட்டு, 424 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 16 ஆயிரம் லிட்டா் ஊறல் அழிக்கப்பட்டும், 2,500 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா்.
தற்போது, பனை கள்ளுக்கான பருவம் என்பதால், மது பிரியா்கள் கள்ளு குடிக்க சென்றனா். ஆனால், அங்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல், நூற்றுக்கும் மேற்பட்டோா் கூடியதால், கள்ளு விற்பனை செய்ய இயலாமல் போனதாக தெரிகிறது.
சில மலைக் கிராமத்தில் உள்ள மது பிரியா்கள் ஒன்று சோ்ந்து தங்களது மது தேவைக்காக வீட்டின் அருகே கள்ளச் சாராயத்தை காய்ச்சுவதாகவும் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படாத நிலையில், கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழப்பு ஏதும் ஏற்படுவதற்கு முன்பே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்தை வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றியா விசிக மாநாடு ? | VCK Manadu | Thirumavalavan | CM Vijay | TVK | Dinamani

வங்கதேசத்தில் நாளை அதிபர் தேர்தல்! 35 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கெடுப்பு மூலம் தேர்வு!
மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் ஆர்ஜே பாலாஜி!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK


