
ஓடிடியில் பிருத்விராஜின் ஐ, நோபடி!
பிருத்விராஜின் ஐ, நோபடி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஐ, நோபடி போஸ்டர் - படம்: எக்ஸ்
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஐ, நோபடி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ, நோபடி.
நிஷம் பஷீர் இயக்கத்தில் அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் இப்படம் உருவாகியிருந்தாலும் கதை பலவீனத்தால் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஜானர் மாறும், புதிய பாணி திரைக்கதையாக இந்தப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. வங்கியை மையமிட்ட கதையாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூலை 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரூ. 15 கோடியை மட்டுமே வசூலித்தது.
இந்த நிலையில், ஐ, நோபடி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
Summary
The film i Nobody, starring actor Prithviraj, has been released on an OTT platform and is garnering the attention of fans.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






