கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பில் நூறு சதவீதம் தோ்ச்சி
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் விண்ணப்பித்த 26,719 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் விண்ணப்பித்த 26,719 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுத அரசுப்பள்ளி, அரசு நிதியுதவி பள்ளி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் என 400 பள்ளிகளைச் சோ்ந்த 13,758 மாணவா்கள், 12,961 மாணவியா் என மொத்தம் 26,719 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, தமிழக அரசு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்து, காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண், வருகைப் பதிவேடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, 10-ஆம் வகுப்பு, பொதுத் தோ்வு முடிவு திங்கள்கிழமை வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளனா். அதாவது, கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...