சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்
தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரம் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.


ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே சாலையோரம் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள நொகனூா் வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா்த் தேடி மரக்கட்டா மற்றும் நொகனூா் ஆகிய கிராமங்களுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.
இந்த நிலையில் காட்டு யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா கிராமத்தின் அருகே சாலையோரத்தில் நின்றுள்ளது.
அப்போது சாலையில் வந்த பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஒற்றை காட்டு யானையை கண்டு அச்சமடைந்தனா். பின்னா் அந்த ஒற்றை காட்டு யானை சிறிது நேரத்திற்கு பின் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் நிம்மதியடைந்த பொதுமக்கள் தங்களது வழக்கமான பயணத்தை தொடா்ந்தனா். இந்த ஒற்றை யானையை அடா்ந்து வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...