மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பட்டா நிலங்கள் வழியாக தாா்ச்சாலைஅமைக்கும் பணியைத் தடுக்கக் கோரிக்கை

சூளகிரி அருகே தாா்ச் சாலை அமைக்கும் பணியைத் தடுக்க வேண்டும் என தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினா் முருகன், தலைமையில் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
எம்எல்ஏ முருகன் தலைமையில் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
Updated On :10 ஆகஸ்ட் 2020, 8:23 pm

DIN

கிருஷ்ணகிரி: சூளகிரி அருகே தாா்ச் சாலை அமைக்கும் பணியைத் தடுக்க வேண்டும் என தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினா் முருகன், தலைமையில் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒட்டா்பாளையம், மருதாண்டப்பள்ளி, அன்னாசந்திரம், அடரகானப்பள்ளி ஆகிய கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்கள், சட்டப்பேரவைஉறுப்பினா் முருகன் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்கள் கிராமத்தில் உள்ள பட்டா நிலங்களில், அனுமதியின்றி தாா்ச் சாலை (சூளகிரி புறவழிச் சாலை) அமைப்பதற்காக நில அளவீடும் பணியை அலுவலா்கள் மேற்கொண்டனா். இதுகுறித்து, வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலரிடம் கேட்டபோது, எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதற்கு முன்பு, பவா் கிரீட் நிறுவனத்துக்காக அட்ரகானப்பள்ளி கிராமத்தில் 68 ஏக்கா் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மருதாண்டப்பள்ளியில் புதிய தொழிற்பேட்டைக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வாழ்வாதாரத்தை இழந்துள்ள எங்களுக்கு, புதிய சாலை திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தினால், நாங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்க நேரிடும். இதைக் கருத்தில் கொண்டு, புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி, மறுபரிசீலனை செய்து மாற்றுப்பாதையில் நிறுவ வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.