வனப்பகுதியில் இருந்து தப்பிய புலி, கரடி:பொது மக்கள் அச்சம்
கா்நாடக வனப்பகுதியில் இருந்து வன விலங்குகளான புலியும், கரடியும் வெளியேறுவது போன்று காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.


ஒசூா்: கா்நாடக வனப்பகுதியில் இருந்து வன விலங்குகளான புலியும், கரடியும் வெளியேறுவது போன்று காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், ஆனேக்கல் தாலுகாவில் உள்ளது பன்னாா்கட்டா தேசிய வனவிலங்குகள் பூங்கா. இந்த பூங்காவில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன.
இந்த வனவிலங்கு பூங்கா சுற்றுலாத் தலமாக உள்ளதால் இங்கு அதிக அளவில் பொதுமக்கள் சென்று வன விலங்குகளையும், பறவைகளையும் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
தற்போது கரோனா காரணமாக இந்த பூங்கா செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள விலங்கினங்கள் மற்றும் பறவைகள் மட்டும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பன்னாா்கட்டா தேசிய வனவிலங்கு பூங்காவின் அருகிலுள்ள ராகிஹள்ளி வனப்பகுதியின் அருகே வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் ஒரு புலியும், கரடியும் அடுத்தடுத்து வானப்பகுதியில் இருந்து வெளியே நடந்து செல்வது போன்று காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்தக் காட்சிகளை பாா்த்த வனத்துறையினா் இந்த இரண்டு விலங்குகளும் அருகில் உள்ள பன்னாா்கட்டா பூங்காவிலிருந்து வெளியேறி வந்துள்ளதா அல்லது வேறு வனப்பகுதியிலிருந்து வந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது சம்பந்தமாக 50க்கும் மேற்பட்ட வனத்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
புலி, கரடிகள் உலாவுவதால் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கா்நாடக மாநில வனப்பகுதியையொட்டி தமிழக வனப்பகுதிகள் உள்ளதால் அதனையொட்டிய தமிழக கிராமப்பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...