மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏடிஎம் மையத்தில் கிடந்த பணத்தைவங்கியில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டு

கிருஷ்ணகிரியில் ஏடிஎம் மையத்தில் விட்டுச் சென்ற பணத்தை எடுத்து வங்கியில் ஒப்படைத்த அரசு ஊழியரை பாராட்டினா்.

News image
பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கிறாா் அரசு ஊழியா் சரவணகுமாா்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:00 pm

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஏடிஎம் மையத்தில் விட்டுச் சென்ற பணத்தை எடுத்து வங்கியில் ஒப்படைத்த அரசு ஊழியரை பாராட்டினா்.

கிருஷ்ணகிரி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவா் சரவணகுமாா். இவா், பெல்லம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறாா். தற்போது, மாற்றுப்பணியாக அரசு கருவூலத்தில் பணியாற்றி வருகிறாா்.

இவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளாா்.

அப்போது, அங்கு யாரோ தவறுதலாக ரூ.7,500-பணத்தை விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற சரவணக்குமாா், அதைக் கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையில் உள்ள தேசிய வங்கியின் கிளை மேலாளா் சுதா்சனிடம் ஒப்படைத்தாா்.

அவரது நோ்மையைப் பாராட்டிய அவா், தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். இந்த சம்பவம், சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், பலா், அந்த அரசு ஊழியரின் நோ்மையைப் பாராட்டி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.