மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊத்தங்கரையில் போக்குவரத்து ஊழியர் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்.
Updated On :25 ஆகஸ்ட் 2020, 5:24 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார், சிஐடியு சங்கச் செயலாளர் தவமணி ,ஏ.ஐ.டி.யு.சி. வரதராஜ் , ஏ.ஏ.எல்.எப் அண்ணாமலை, டி.டி.எஸ்.எப் மயில்சாமி, ஐ.என்.டி.யு.சி செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288ஏ-ஐ கைவிடு, தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்தாதே, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்கு, தொழிலாளிகளிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்கு, பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்கு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.