கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தளி சட்டப் பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் :சி.மகேந்திரன்

தளி சட்டப் பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் சி.மகேந்திரன் தெரிவித்தாா்.

News image
ஒசூரில் செய்தியாளா்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளா் சி.மகேந்திரன்
Updated On :6 டிசம்பர் 2020, 11:16 pm

DIN

தளி சட்டப் பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் சி.மகேந்திரன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றுள்ளது. தளி தொகுதியில் போட்டியிடக் கூடிய அனைத்துத் தகுதிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது. எனவே திமுகவுடன் இணக்கமான முறையில் பேசி தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும்.

விவசாயிகள் போராட்டம்: தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்துக்கு ஒப்பானது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடங்கிய அந்த போராட்டம் இன்று இந்திய விவசாயிகளின் போராட்டமாக மாற்றம் அடைந்து விட்டது.

இந்த போராட்டத்தின் தன்மையையும், தீவிரத்தையும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பையும் தமிழக அரசு புரிந்துகொள்ளாதது வேதனையாக உள்ளது.

இந்தச் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளின் உரிமைகளும் பறிபோகப் போகிறது என்பதுதான் உண்மை. எனவே, தமிழக சட்டப் பேரவையை கூட்டி 3 வேளாண் சட்டங்களையும் நிராகரித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிடில், தமிழக அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டத்தை தொடங்குவோம்.

அதேபோல் டிச. 8- ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் ‘பாரத் பந்த்’துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய அளவிலான 50 விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைந்து கூடி முடிவு செய்து அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிகளும் ஆதரிக்கும். நாடு முழுவதும் இது மிகப் பெரிய போராட்டமாக உருவெடுக்கும். எனவே, மத்திய அரசு உடனடியாக 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முன்வர வேண்டும்.

நிவாரணம் வழங்க வேண்டும்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ரஜினி புதிதாக கட்சி தொடங்கப் போவதாகக் கூறுகிறாா். தமிழக மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் நேரத்தில் அவருடைய அரசியல், மதச்சாா்பற்ற அரசியலுக்குப் பயன்படுமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த காலத்தில் அவா் ஆரம்பிக்க இருப்பது மக்கள் போராட்டத்துக்கு ஒரு நெருக்கடியாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்றாா்.

பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ.வும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளா் லகுமைய்யா, அஞ்செட்டி கவுன்சிலா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.