கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்: ஊத்தங்கரை எம்எல்ஏ ஆய்வு

ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணிகளுக்கு சிறப்பு சுருக்குமுறை திருத்த முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமை ஆய்வுசெய்த எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ்.
Updated On :12 டிசம்பர் 2020, 9:04 pm

DIN

ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பதற்கு 18 வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், திருத்தும் பணிகளுக்கு சிறப்பு சுருக்குமுறை திருத்த முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 வாக்குச் சாவடி மையத்திலும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 4 மையத்திலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 மையத்திலும், ஊத்தங்கரை அம்பேத்கா் நகா் பகுதியில் ஒரு மையம் என மொத்தம் 16 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்த முகாம் நடைபெற்றது.

முகாமில் ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். நிலவள வங்கித் தலைவா் சாகுல் அமீது, எக்கூா் கூட்டுறவு சங்கத் தலைவா் வேடி, 1056 கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பி.கே. சிவானந்தம், 1-வது வாா்டு கிளை செயலாளா் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.