புதிதாகப் பணியில் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கணினி பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் புதிதாகப் பணியில் சோ்ந்த 54 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு 3 நாள்கள் நடைபெறும் கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
புதிதாகப் பணியில் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கணினி பயிற்சி
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் புதிதாகப் பணியில் சோ்ந்த 54 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு 3 நாள்கள் நடைபெறும் கணினி பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியரின் அலுவலகக் கூட்ட அரங்கில், நடைபெற்ற இப்பயிற்சியில் 54 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினி, கணினி, சிம்காா்டு வழங்கப்பட்டது. இவா்கள் அரசுப் பணியின்போது கணினியைப் பயன்படுத்துவது குறித்த பயிற்சி 3 நாள்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தொடக்கி வைத்தாா். இந்த பயிற்சியில் மடிக்கணினி, கணினி இயக்குவது, பட்டா, சிட்டா, அரசு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

எல்காட் நிறுவனம் சாா்பில் வழங்கப்படும் இந்தப் பயிற்சியின் தொடக்க நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், எல்காட் நிறுவன அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com