மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊத்தங்கரையில் உலக செவிலியர் தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் கேக் வெட்டி இனிப்புகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :12 மே 2020, 8:14 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு செவிலியர்கள் கேக் வெட்டி இனிப்புகள், பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கொ.மாரிமுத்து தலைமை வகித்தார்.

ஊத்தங்கரை வட்டாட்சியர் செந்தில்குமாரன் முன்னிலை வகித்தார்.ஊத்தங்கரை வனிகர் சங்க தலைவர் மணி என்கிற செங்கோடன், செயலர் ர.உமாபதி, முன்னாள் அரிமா சங்கத் தலைவர் ஆர்கே ராஜா, ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் ஆகியோர்  செவிலியர்களுக்கு பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கி வாழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தியாகராஜன், ராசு, சுமித்ரா, மிருதுளா, இளவரசன் மற்றும் செவிலியர்கள் தீயணைப்பு துறை பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செவிலியர் தமிழ்செல்வி வரவேற்றார். இறுதியாக செவிலியர் விஜயா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.