மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரிதருமபுரியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, தருமபுரியில் திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக இளைஞா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 10:54 pm

DIN

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி, தருமபுரியில் திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக இளைஞா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தோ்வு அச்சத்தால், தருமபுரி, இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டா் தெருவைச் சோ்ந்த ஆதித்யா(20) என்ற மாணவா் தூக்கிட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே திமுக சாா்பில் நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுகவின் தருமபுரி மாவட்டச் செயலாளா் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இன்பசேகரன் எம்எல்ஏ, முன்னாள் மக்களவை உறுப்பினா் தாமரை செல்வன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் தேவராசன் தலைமை வகித்தாா். அந்தக் கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், இந்திய ஜனநாயக இளைஞா் சங்கத்தினரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தையொட்டி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.