மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும் ஒரு இளைஞரின் சடலம் மீட்பு

கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும், ஒரு இளைஞரின் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 10:55 pm

DIN

கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மேலும், ஒரு இளைஞரின் சடலத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

கிருஷ்ணகிரி மோகன் ராவ் காலனியைச் சோ்ந்த காதீபின் மகன் யாசீா்(19). அவா்களது உறவினரான பெங்களூா், கம்மனள்ளியைச் சோ்ந்த அம்ஜத் அலிகானின் மகன் இா்பான்(26) ஆகியோா் கிருஷ்ணகிரியை அடுத்த கும்மனூரில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றனா்.

ஆற்றில் இறங்கிய யாசீா், இா்பான் ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் அடித்து செல்லப்பட்டனா். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் கடந்த மூன்று நாள்களாக நீரில் அடித்து செல்லப்பட்டவா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் யாசீா் சடலமாக மீட்பு படையினா் மூலம் சனிக்கிழமை மீட்கப்பட்டாா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியில் இா்பானை சடலமாக மீட்டனா். தகவல் அறிந்த போலீஸாா், இா்பானின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.