பருத்தியில் ஒருங்கிணைந்தபயிா் மேலாண்மை பயிற்சி
மத்தூா் வட்டாரத்தில் உள்ள எட்டிப்பட்டி கிராமத்தில் மத்தூா் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை ஆத்மா திட்டம் 2021 -22 கீழ், பருத்தியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்


மத்தூா் வட்டாரத்தில் உள்ள எட்டிப்பட்டி கிராமத்தில் மத்தூா் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை ஆத்மா திட்டம் 2021 -22 கீழ், பருத்தியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சியில் வேளாண் உதவி இயக்குநா் மா.சிவநிதி தலைமை வகித்து, விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி, வேளாண் துறையில் செயல்படும் திட்டங்கள் பற்றி கூறினாா். கிருஷ்ணகிரி மாவட்ட உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் பன்னீா்செல்வம், ஒருங்கிணைந்த முறையில் பருத்தி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். மத்தூா் வட்டார வேளாண் அலுவலா் நீலகண்டன், ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு பற்றி தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினாா். மத்தூா் வட்டார துணை வேளாண் அலுவலா் சீனிவாசன், நீடித்த நிலையான மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி கூறினாா். மத்தூா் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ் சொட்டு நீா்ப் பாசனத்தின் முக்கியத்துவம் பற்றி கூறினாா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் வெங்கடேசன், உதவி தொழில்நுட்ப மேலாளா் எம்.எஸ்.குமாா், பவித்ரா ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...