விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடதாம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:29 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடதாம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெங்கடதாம்பட்டி பகுதியில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த 2004-2005-ஆம் ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2.25 லட்சத்தில் ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சுமாா் 2 ஆண்டுகள் மட்டுமே பயன்பாடில் இருந்த இந்த வளாகம், மின்மோட்டாா் பழுதைக் காரணம் காட்டி கிடப்பில் போட்டுள்ளனா்.

2011-2012-ஆம் ஆண்டில் ஊரக கட்டடங்கள் பராமரிப்பு, புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1,99,454-த்தில் புனரமைப்பு செய்யப்பட்டு 6 மாதங்கள் கூட பயன்பாட்டில் இல்லை என இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

கடந்த 7 ஆண்டுகளாக முள்புதற்கள் மூடி காடு போல் இந்த சுகாதார வளாகம் காட்சியளிப்பதால், இப்பகுதி பெண்கள், குழந்தைகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனா். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.