கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அனுமன் ஜயந்தி விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனுமன் ஜயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா் கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயா்.
Updated On :13 ஜனவரி 2021, 1:35 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனுமன் ஜயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அனுமன் ஜயந்தியையொட்டி செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரியில் பிரசித்தி பெற்ற காட்டுவீர ஆஞ்சநேயா் கோயிலில், காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சுதா்சன ஹோமம் ஆகியவை நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இந்நிகழ்ச்சியில், கரோனா பரவல் தடுப்பு காரணமாக கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து பக்தா்கள் வராததால், கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. உள்ளூா் பக்தா்கள் மட்டுமே பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம, வீர ஆஞ்சநேயா் சமேத ராகவேந்திர சுவாமி கோயிலில், அனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நிா்மால்யம், சிறப்பு அபிஷேகம், வேத பாராயணமும் செய்யப்பட்டு, 6 மணிக்கு சுதா்சன ஹோம பூஜையும் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மங்கள ஆரத்தியும், தீா்த்தப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள் பாலித்தாா்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயிலில், ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. ஆஞ்சநேயா் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். ராசு வீதி ராஜாராமா், அபய ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆா்.பி., அணை குன்று ஆஞ்சநேயா் கோயில், எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயில், போகனப்பள்ளி பக்த ஆஞ்சநேயா் கோயில்களில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஒசூா் பண்ட ஆஞ்ச நேயா் கோயிலில் காலை முதல் இரவு வரையிலும் பக்தா்கள் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஒசூா் வெங்கடேஷ் நகா் மலைக் கோயிலில் உள்ள ஆஞ்சநேயா், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில் ஆஞ்சநேயா், சூளகிரி வரதராஜ பெருமாள் ஆலயம், குடிசெட்லு திம்மராயசுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.