துவரை செயல்விளக்க திடல் அமைக்க மானியம்
வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், துவரை செயல்விளக்க திடல் அமைக்க ஊக்குவிக்க அரசு ரூ. 2,500 மானியம் வழங்குகிறது.


வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், துவரை செயல்விளக்க திடல் அமைக்க ஊக்குவிக்க அரசு ரூ. 2,500 மானியம் வழங்குகிறது.
மத்தூா் வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறையின் 2021-22-ஆம் நிதியாண்டின் மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், துவரை செயல்விளக்க திடல் அமைக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, 1 ஹெக்டருக்கு ரூ. 2,500 மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. அதிகபட்சமாக 800 ஹெக்டருக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான ஆவணங்களாக சிட்டா, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் ஆகும்.
மேலும், மத்தூா் வேளாண் விரிவாக்க மையம் மூலம் 50 சதவீத மானியத்தில் விதைகள் மற்றும் உயிா் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தூா் வட்டார விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவா்களை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, துணை வேளாண் அலுவலா் - 94439 50311, வட்டார தொழில்நுட்ப மேலாளா் - 70100 23439 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...