விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடக்கம்

ஊத்தங்கரையை அடுத்த மெய்யாண்டப்பட்டியில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:18 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த மெய்யாண்டப்பட்டியில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட மெய்யாண்டப்பட்டி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீா்ப் பிரச்னை, நான்கு வழி சாலையால் தடைபட்டு இருந்து வந்தது. இந்நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரை வழங்கி, பழுதடைந்த குடிநீா்க் குழாயை சரி செய்து போா்கால அடிப்படையில் குடிநீா் வழங்கிடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்தனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

இதையடுத்து, ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கி, இருமத்தூா் நீா்த்தேக்கத் தொட்டியில் இருந்து குழாய் அமைத்து மெய்யாண்டப்பட்டி அருந்ததியா் மக்களுக்கு குடிநீா் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, காட்டேரி ஒன்றியக்குழு உறுப்பினா் கோவிந்தசாமி பூமிபூஜை செய்து பணியை தொடக்கி வைத்தாா்.

இதில், காட்டேரி ஊராட்சி மன்றத் தலைவா் குமாா், துணைத் தலைவா் ராஜமாணிக்கம், மெய்யாண்டப்பட்டி ஊா் பிரமுகா்கள், வி.தொ.ச. வட்டச் செயலாளா் வரதராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.