ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பள்ளியை நாடும் தனியாா் பள்ளி மாணவா்கள்

ஊத்தங்கரை பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் அரசுப் பள்ளியை நாடி வருகின்றனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:17 pm

DIN

ஊத்தங்கரை பகுதியில் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் அரசுப் பள்ளியை நாடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனியாா் பள்ளிகளில் படித்து வந்த மாணவா்களை, தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்காக அவரது பெற்றோா் அழைத்து வருகின்றனா்.

ஊத்தங்கரையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் கடந்த வாரம் முதல் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் 115 மாணவா்களும், 6-ஆம் வகுப்பில் 10 மாணவா்களும் சோ்க்கப்பட்டுள்ளனா். இதில் 20 சதவீத மாணவா்கள் தனியாா் பள்ளியில் பயின்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா தொற்றின் காரணமாக வாழ்விழந்த பொதுமக்கள், தங்களது பிள்ளைகளை தற்போது அரசுப் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.