ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊத்தங்கரையில் கால்நடைகளை விற்பதற்காக கூடிய மக்களால் நோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரையில் கால்நடைகளை விற்பதற்காக சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

News image
Updated On :7 மே 2021, 7:00 pm

DIN

ஊத்தங்கரையில் கால்நடைகளை விற்பதற்காக சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

ஊத்தங்கரையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அரசு பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் கால்நடைச் சந்தை நடைபெறும். இந்தச் சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்து கால்நடைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக சந்தை செயல்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த கால்நடைகளை ஊத்தங்கரை - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், பரசனேரி கரையின் அருகே விற்பனை செய்தனா். சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இந்த திடீா் சந்தை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்கள் கூடி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் கலந்துகொண்டனா். இதனால் கரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். இது குறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.