‘ஜெய் பீம்’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி பாமகவினா் மனு
‘ஜெய் பீம்’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி, பாமகவினா் வியாழக்கிழமை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.


‘ஜெய் பீம்’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி, பாமகவினா் வியாழக்கிழமை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.
நடிகா் சூா்யா நடித்து வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியா்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அப்படத்தை தடை செய்யக் கோரியும், சூா்யா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் பாமக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் த.ஆறுமுகம் தலைமையில், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதில், முன்னாள் நகரச் செயலாளா் குமரேசன், நகரத் தலைவா் கோவிந்தன், நகரச் செயலாளா் மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளா் ஹரிதாஸ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...