விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேசிய நெடுஞ்சாலையில் புகுந்த மழை வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை மேம்பாலம் அருகே, பெரிய தள்ளப்பாடி ஏரி, மற்றும் ஜவ்வாது மலையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:46 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணை மேம்பாலம் அருகே, பெரிய தள்ளப்பாடி ஏரி, மற்றும் ஜவ்வாது மலையில் இருந்து வெளியேறும் உபரிநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால் சாலையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை, பெங்களூரில் இருந்து புதுச்சேரி வரை செல்லும் வாகனங்கள், 30 கி.மீ. மேல், சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூா் சென்று, அங்கிருந்து சிங்காரப்பேட்டை வழியாக திருவண்ணாமலை செல்கின்றனா். அரூா் பகுதியில் இருந்தும், பேருந்துகள் அம்மாபேட்டை வழியாகச் சென்று வருகின்றன. இதனால் ஊத்தங்கரையில் இருந்து செல்லும் பேருந்துகள், வாகனங்கள் 30 கி.மீ. தொலைவு, சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் நீா் வடிந்த பிறகுதான், இந்தச் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.