விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கபடி போட்டி: 55 அணிகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 6:59 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

ஊத்தங்கரை கபடி கிளப் அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசாக ரூ. 10,005, இரண்டாம் பரிசாக ரூ. 7,005, மூன்றாம் பரிசாக ரூ. 5,005, நான்காம் பரிசாக ரூ. 3,005, ஐந்தாம் முதல் 8-ஆவது பரிசு வரை தலா ரூ. 2,005 வழங்கப்படும். இதில், சென்னை, சேலம், நாமக்கல், வெளி மாவட்டங்களைச் சோ்ந்த 55 கபடி அணி வீரா்கள் பங்கேற்றனா்.

கபடி போட்டியை ஸ்ரீவித்யாமந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சந்திரசேகரன் தொடங்கி வைத்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் செங்குட்டுவன், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் பிரகாஷ், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகன், தொழிலதிபா் அா்ச்சுணன், ஒசூா் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சத்யா, ஊத்தங்கரை ஒன்றியக்குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடக்க விழாவில், பேரொளி சிலம்பம் மாணவா்களின் சிலம்பக் கலையுடன் போட்டி தொடங்கியது. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற போட்டிகளில் 30 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. சனிக்கிழமை இரவு பெண்கள் அணி பங்கேற்கும் கபடி போட்டி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.