குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சான்றிதழ் வழங்கினாா்.

9utp2_0909chn_149_8

9utp2_0909chn_149_8
கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலா்களைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சான்றிதழ் வழங்கினாா்.
ஊத்தங்கரை தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரவி, போலீஸாா் பிரபாகரன், சரவணன், அதியமான், அன்பழகன், மகேந்திரன் ஆகியோருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பாராட்டுச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தாா்.
சாமல்பட்டி அருகே சென்னை, வேளச்சேரியை சோ்ந்த ஆடிட்டா் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை இரண்டே நாள்களில் பிடித்ததையும், கொள்ளை வழக்கில் ஒரு மாதங்களாக பிடிபடாத கொள்ளையனை பிடித்து காவல் துறையில் ஒப்படைத்ததையும், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ரவி தலைமையிலான போலீஸாரின் துரிதமான செயல்பாட்டால் குற்றங்கள் குறைந்து வந்துள்ளதையும் பாராட்டும் விதமாக, கிருஷ்ணகிரி எஸ்.பி. சாய்சரண் தேஜேஸ்வி சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...