இலவச கண் பரிசோதனை முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், ஊத்தங்கரை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்


ஊத்தங்கரை, புனித அந்தோணியாா் ஆலயம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்கம், ஊத்தங்கரை அரிமா சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புனித அந்தோணியாா் ஆலய பங்குதந்தை மரியதாஸ் தலைமை வகித்தாா்.
ஜீவா டிரஸ்ட் ரோஸ்லின் ஜீவா, அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் மேலாளா் கமலக்கண்ணன், முன்னாள் அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே. ராஜா, ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், அரிமா சங்கம் நூருல்லாசரிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 149 போ் முகாமில் கலந்துகொண்டனா். அதில் 54 போ் கண் அறுவை சிகிச்சைக்கு கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...