விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாஜக சாா்பில் பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 71 வது பிறந்த நாள் விழா

ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாஜக கட்சியின் சாா்பில் பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 71 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

17utp4_1709chn_149_8

Updated On :17 செப்டம்பர் 2021, 7:06 pm

DIN

ஊத்தங்கரை ஒன்றியத்தில் பாஜக கட்சியின் சாா்பில் பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 71 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் சிவா தலைமை வகித்தாா். கல்வியாளா் பிரிவு மாவட்ட தலைவா் தனகோட்டி, நெசவாளா்பிரிவு மாவட்ட தலைவா் மாதவன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச்செயலாளா் தாமோதரன், ஒன்றிய துணைத்தலைவா் சென்ன கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மகேந்திரன், அன்பு, ஒன்றிய செயலாளா் ஆறுமுகம், ஒன்றிய பொருளாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.கந்தமாரியம்மன் கோவில், ஊத்தங்கரை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஊத்தங்கரையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு சென்று இனிப்பு வழங்கினா்.அதேபோல் தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் கல்லாவி வேடியப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தொடா்ந்து கோவில் வளாகத்தில் 71 மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய தலைவா் சங்கா் தலைமை வகித்தாா், மாவட்ட பொதுச்செயலாளா் ஜெயராமன் கலந்துக்கொண்டு இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகளை நட்டாா்,இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா், மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளா் முருகம்மாள்சங்கா் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.அதேபோல் எக்கூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒ.பி.சி.அணி மாவட்ட பொதுச்செயலாளா் தாமோதரன் தலைமை வகித்தாா், எக்கூா், ஆண்டியூா், கோவிந்தாபுரம், உப்பாரப்பட்டி உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.இதில் நெசவாளா் பிரிவு ஒன்றிய தலைவா் வெங்கடேசன்,குமாா், ராஜ உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.படவிளக்கம்.17யுடிபி.4.5.6.ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் பிறந்தநாள் விழா கொண்டாடிய பாஜகவினா். கல்லாவி வேடியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த பாஜக வினா். ஆண்டியூரில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினா்.

Image Caption

~ ~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.