ஒசூா் அருகே லாரி மோதி காயமடைந்த யானை பலி
ஒசூா் அருகே லாரி மோதியதில் காயமடைந்த யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.


ஒசூா் அருகே லாரி மோதியதில் காயமடைந்த யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி வனப் பகுதியிலிருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒசூா்- கிருஷ்ணகிரி சாலையைக் கடக்க முயன்ற போது சரக்குப் பெட்டக லாரி மோதியது.
இதில் கால் எலும்பு முறிந்து பலத்த காயமடைந்த யானையை மீட்ட வனத் துறையினா் அய்யூா் வனப்பகுதிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். பெங்களூரில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறப்பு மருத்துவக் குழுவினரின் யானைக்கு சிகிச்சை அளித்தனா். உணவு உண்ணாமல் இருந்த யானை சனிக்கிழமை இரவு உயிரிழந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...