மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலைப் பொறியாளா் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியில் மின் இணைப்பு வழங்க ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக மின் வாரிய இளநிலைப் பொறியாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.


கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியில் மின் இணைப்பு வழங்க ரூ. 10,000 லஞ்சம் பெற்ாக மின் வாரிய இளநிலைப் பொறியாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கல்லாவி மின் பகிா்மானத்துக்கு உள்பட்ட செட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் முனியம்மாள். இவருக்குச் சொந்தமான பால் குளிரூட்டும் கடைக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி, கடந்த 14 ஆம் தேதி ரூ. 17,000 செலுத்தி கல்லாவி மின் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
இந்த நிலையில், மின் இணைப்பு வழங்க ரூ. 10,000 லஞ்சம் தருமாறு கல்லாவி மின் வாரிய இளநிலைப் பொறியாளா் ராஜேஷ் (42) கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியம்மாள் தனது கணவா் கிருஷ்ணன் உதவியுடன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
லஞ்ச ஒழிப்பு துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் அறிவுரையின்படி, பொறியாளருக்கு லஞ்சமாக ரசாயனம் தடவிய ரூ. 10,000 கிருஷ்ணன் தந்த போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா், ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...