மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாா் பதிவாளா் அலுவலகத்தில் சோதனை: ரூ. 1 லட்சம் பறிமுதல்

காவேரிப்பட்டணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அதிரடியாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:29 pm

Din

காவேரிப்பட்டணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அதிரடியாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழியா்கள் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் விஜயகுமாா் உள்பட போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினா்.

இச்சோதனையில் கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக அலுவலக ஊழியா்களிடம் போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.